டெல்லியில் 77 % பிக்பாக்கெட் தொழில் செய்வது பெண்கள்!

Loading...

டெல்லியில் 77 % பிக்பாக்கெட் தொழில் செய்வது பெண்கள்!
டெல்லி மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட் சம்பவங்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும், பிக்பாக்கெட் அடிப்பதில் 77 சதவிகிதம் பேர் பெண்கள்தான் என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியுடன், காசியாபாத், நொய்டா, ஃபரீதாபாத், குர்கான் ஆகிய நகரங்களை இணைக்கிறது டெல்லி மெட்ரோ ரயில் சேவை. 

பிக்பாக்கெட் தொழில் செய்யும் பெண்கள்
தினமும் சுமார் 26 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் இந்த சேவையில், எல்லோரும் எப்போதும் அலர்ட்டாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, பிக்பாக்கெட் அடிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது என்கிறார்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரிகள். 

இதுதொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், ’இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 521 பிக்பாக்கெட் திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு பிடிபட்டவர்களை விட, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம். இதுமட்டுமல்ல, கைதான 521 பேரில் 401 பேர் பெண்கள்தான். 

சந்தேகம் வராமல் இருக்கவும், சுலபமாக மக்களிடம் பேசமுடியும் என்பதற்காகவும் குழந்தைகளை வைத்துக்கொண்டு பிக்பாக்கெட் அடிப்பதில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய பிக்பாக்கெட் சம்பவங்களை தடுக்க சீருடை அணிந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மட்டுமில்லாமல் சாதாரண மஃப்டி போலீஸையும் தீவிரமாகக் களமிறக்கி இருக்கிறோம்’ என்றனர். மேலும், ’பொது இடங்களில் தங்களையும், தங்கள் பொருட்களையும் பாதுகாத்துக்கொள்ளும் விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். பிக்பாக்கெட்டுகள் பிடிபட்டால், பொருள் கிடைத்தால் போதும் என்று விட்டுவிடாமல், போலீசில் புகார் அளிப்பது முக்கியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்’ என்றனர்.

Tags: பிக்பாக்கெட், பெண்கள், தொழில், டெல்லி
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.