பிக்பாஸ் செலவு 70 கோடி! வரவு 1180 கோடி!

Loading...
 பிக்பாஸ் செலவு 70 கோடி! வரவு 1180 கோடி! கமலுக்கு மட்டும் 20 கோடி! அடேங்கப்பா…

விஜய் டிவியை ஆன் பண்ணினாலே முட்டைக்கண்ணை உருட்டியபடி கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி கொண்டிருக்கிறார். ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று தொடங்கிவிட்டது. 

எதிர்பார்த்ததுபோலவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் மட்டுமில்லாமல் நம்பகத்தன்மையும் மிஸ்ஸிங். 

இதன் காரணமாகவோ என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூகவலைத்தளங்களில் கன்னாபின்னா கமெண்ட்ஸை தெறிக்க விடுகிறார்கள். 

பிக்பாஸ் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போதே மீம்களும் வலம்வர தொடங்கிவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்த விஜய் டிவி செய்த செலவு என்ன? இந்நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு போன்ற விஷயங்களும் வாட்ஸ் ஆப்பில் வரத்தொடங்கிவிட்டன. 

இந்த புள்ளி விவரம் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இது உண்மையாக இருந்தால் விஜய் டிவிக்கு கொள்ளை லாபம் தான். 

நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலுக்கு – 20 கோடி. 

ஸ்டுடியோ செட்டிங் செலவு – 20 கோடி. 

15 பிரபலங்களுக்கு – 2 கோடி 

100 நாட்கள் படப்பிடிப்பு செலவு – 25 கோடி 

முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழா செலவு – 3 கோடி 

மொத்த செலவு -70 கோடி 

இனி விஜய் டிவிக்கு கிடைக்க போகும் வரவு! 

விளம்பரம் மட்டும் 30 வினாடிக்கு- 25 லட்சம் 

ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = 12.5 கோடி 

100 நாட்களுக்கு வரவு – 1250 கோடி 

பிக்பாஸ் மொத்த லாபம் = 1180 கோடிகள்! 

அடேங்கப்பா, தலையே சுத்துதே….
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.