கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?

Loading...
 
கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?
கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்பகோணத்தில் நேற்று ஒரு வாலிபர் கல்லூரி மாணவி ஒருவருடன் லாட்ஜில் தங்கினார். பகல் முழுவதும் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அந்த அறை இரவில் வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்றுச்சாவி கொண்டு அறையை திறந்து பார்த்தபோது அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்.

உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அவருடைய அடையாள அட்டை மூலம் அவர் யார் என்பதை கண்டுபிடித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்

இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி கும்கோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரது 19 வயது மகள் கீர்த்திகா என்பதும் இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.