கடையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற பிரபல நடிகை! விரட்டி பிடித்த பொதுமக்கள்! அதிர்ச்சி தகவல்கள்!

Loading...

கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த திரைப்பட நடிகை ஜெயம்மா. இவர் கன்னட திரையுலகில் சுதீப், உபேந்திரா போன்ற பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜெயம்மா, ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜூலு என்பவருடன் ஒரு கடைக்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கு வாங்கிய பொருட்களுக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பில் கவுண்டரில் கொடுத்துள்ளார். அந்த நோட்டுகள் வித்தியாசமாக தெரிந்ததால் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஜெயம்மாவிடம் கேட்டுள்ளார். 

அதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய ஜெயம்மா பிறகு கடைக்காரரிடம் இருந்து பணத்தை வாங்கி கொண்டு வேகமாக வெளியேறியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கில் ஜெயம்மா வேகமாக தன்னுடன் வந்த நபருடன் ஆட்டோவில் ஏறியுள்ளார். 

அப்போது கடையின் அருகிலிருந்தவர்கள் ஜெயம்மாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் இந்த பணத்தைக் கொடுத்தாக கூறியுள்ளார். இதுகுறித்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.