300-வது போட்டி சாதனை இருக்கட்டும்.. நான் உயிரோடு இருப்பதே சாதனைதான்.. யுவராஜ் சிங் உருக்கம்.

Loading...

டெல்லி: 300வது ஒருநாள் போட்டியில் ஆட உள்ள யுவராஜ்சிங், அந்த சாதனையைவிட அவர் உயிரோடு இருப்பதே ஒரு பெரும் சாதனைதான் என உருக்கமாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் பெஸ்ட் பினிஷர்களில் ஒருவரான யுவராஜ்சிங், 17 வருடங்களாக அணிக்காக ஆடி வருகிறார். இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் இந்தியாவுக்காக களமிறங்கும்போது அது அவரது 300வது போட்டியாக அமையும்.

இந்த நிலையில், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு யுவராஜ்சிங் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் யுவராஜ்சிங் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.

சிரித்தபடி பேட்டி
300வது ஒருநாள் போட்டியில் ஆடும் சாதனை குறித்து யுவராஜ்சிங்கிடம் கேட்டபோது, உயிரோடு தான் இருப்பதே சாதனைதான் என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இப்போது நல்ல விஷயங்களை மட்டுமே பேசவும் விரும்புகிறேன் என கூறியுள்ளார் யுவராஜ்சிங்.


மீண்ட யுவராஜ்சிங்
யுவராஜ்சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து முற்றிலும்விடுபட்டதோடு, தற்போது பழைய அதிரடி வீரராக மாறி கலக்கி வருபவர் யுவராஜ்சிங். நோய் பாதிப்பில் இருந்து மீள நல்ல மருத்துவ சிகிச்சைகள் மட்டுமின்றி, யுவராஜ்சிங்கின் தன்னம்பிக்கையும் ஒரு காரணமாகும்.

நீடிப்பது முக்கியம்
யுவராஜ்சிங் மேலும் கூறுகையில், இந்திய அணியில் இடம்பிடிப்பது கஷ்டமில்லை. தொடர்ந்து நீடிப்பதுதான் சவாலானது. நான் முதல் போட்டியில் ஆடியபோது சில போட்டிகளின் ஆடுவேன் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை ஆண்டுகாலம் விளையாடியது மகிழ்ச்சியானது.

மகிழ்ச்சி
நான் வாழ்க்கையில் பல உயரங்களையும், பள்ளத்தையும் பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில் என்னால் விளையாட முடியுமா என்று நினைத்தேன். ஆனால் அந்த கட்டத்தையெல்லாம் தாண்டி இப்போதும் விளையாடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது அணிக்கு வரும் இளம் வீரர்கள் திறமைசாலிகளாக உள்ளனர்.


இளம் வீரர்கள் அருமை
இளம் வீரர்க்கு உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பதும், உணவு பழக்க வழக்கம் குறித்தும் நல்ல தெளிவு உள்ளது. மூத்த வீரர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், மேலும் தீவிரமாக அவர்கள் விளையாட வேண்டும். நான் கடந்த 3 வருடமாகவே, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகிறேன். அதனால் எப்போதும் கிரிக்கெட்டோடு தொடர்புடையவனாக இருக்கிறேன். இவ்வாறு யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.