தனுஷிற்கு நல்ல மனைவியாக இருப்பேன்.. அமலா பால் உறுதி

Loading...
 
அமலாபால் தனுஷ்
அமலாபால் தனுஷ்
என்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி.. தனுஷ் சாருக்கு இனி நல்ல மனைவியாக இருப்பேன் என அமபாபால் தெரிவித்துள்ளார்.

செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டாதாரி-2 ம் பாகத்திலும் அமலா பால் நடித்துள்ளார். இந்தப்படத்தில் கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது அப்போது பேசிய அமலா பால், ’முதல் கட்டத்தில் என்னை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் நன்றி தனுஷ் சார். வேலையில்லா பட்டாதாரி 3ம் பாகத்தையும் எதிர்பார்க்கிறேன். தயவு செய்து நம்புங்கள் அதில் உங்களுக்கு நல்ல மனைவியாக

இருப்பேன் உங்களை டார்ச்சர் செய்ய மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

வேலையில்லா பட்டாதாரி-2 கதைப்படி முதல் கட்டத்தில் தனுஷுக்கு தொல்லை கொடுக்கும் மனைவியாகவும், இறுதியாக தனுஷ் அமலாபாலை மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தான் அவர் அவ்வாறு கூறினார்.

ஏற்கெனவே தனுஷுடன் அமலா பாலை இணைத்து வதந்திகள் பரவி வரும் வேளையில் அமபா பாலின்

இந்தப்பேச்சு அனைவரையும் திகைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.