நடிகைகளுக்கு அடிமையாகும் அப்பாவி உதவி இயக்குனர்கள் : அந்த புஷ்டி நடிகை..?

Loading...
அந்த தெலுங்கு தேசத்து நடிகை பற்றி ஒரு நண்பர் சொன்னது பகீர் என்றது. படிங்க நண்பர்களே..!

அவர் எனது நண்பர், நல்ல உதவி இயக்குனர், பெயர் முருகன். கிராமத்தில் இருந்து வந்தவர். சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

நல்ல திறமைசாலி. படம் இயக்குவதற்காக தயாரிப்பாளர் தேடி வந்தார். அப்போது அந்த தெலுங்கு புஷ்டி நடிகை சொந்தப் படம் எடுப்பதாகக் கேள்விப் பட்டு அவரிடம் கதை சொல்ல முயற்சி செய்தார்.

நடிகை ஹைதராபாத் வந்து விடுங்கள் என்று கூறி விட நான் பணம் கொடுத்தேன். ரயில் ஏறிப் போனவர், போனவர் தான்.

அதன் பின் மூன்று வருடங்கள் அவரைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு நாள் சென்னை வந்தார். காஸ்ட்லி காருடன். ஆளே மாறிப் போய் இருந்தார்.

கழுத்தில் ஜெயின், ஆப்பிள் போன், என பணக்காரத் தோற்றம். என்னால் நம்பவே முடியவில்லை.

என்னடா ஆளே மாறிட்டே. படம் பண்ணியாச்சா? எப்போ ரிலீஸ் ஆச்சு? என்ன படம் என்றேன்? சிரித்தார் முருகன். “இல்லடா படமெல்லாம் பண்ண வில்லை. ‘அந்த’ நடிகை என்னை கணவராக வைத்திருகிறார்கள்” என்றார்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆமாடா நான் கதை சொல்லப் போனேன். என்கதை நடிகைக்கு மிகவும் பிடித்துப் போனது.

என்னை அவரது வீட்டில் தங்கி திரைக்கதை எழுதச்சொன்னார். நன்றாகக் கவனித்தார். செலவிற்கு பணம் கொடுத்தார். ஒருமாதம் கதை பண்ணி முடித்தேன்.

படம் கொஞ்சம் லேட் ஆகும். அதுவரை என் கூடவே இருங்க என்றார். எங்கே போனாலும் அழைத்துப் போவார். ஷூட்டிங் போனாலும் அவரின் கேரவனில் என்னை அழைத்துப் போவார்.

ஆறு மாதங்கள் ஓடியது. எனக்கு ஒரு கார் பரிசளித்தார். எனது பிறந்த நாள் அன்று மோதிரம், செயின் வாங்கிக் கொடுத்தார்.

அன்று இரவு………..!

அதன் பின் “நாம் சேர்ந்து வாழ்வோமா உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். என் சொத்துகளுக்கு நீ தான் வாரிசு. ஆனால் எனது பர்சனல் வாழ்வில் மட்டும் கொஞ்சம் தலையிடாமல் இருந்தால் போதும்” என்றார்.

படம் இயக்கினால் அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொது வசதியாக இருக்கிறேன். ஊரில் வீடு கட்டிவிட்டேன்.

வாழ்க்கை நிம்மதியாகப் போகிறது என்றார். எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவரே சொன்னார் “இது எனக்கு மட்டும் அல்ல நிறைய நடிகையர் தனக்கு ஒரு துணை இருந்தால் போதும். கல்யாணம் என்கிற பெயரில் அடிமைப்பட விரும்புவதில்லை.
 
அதனால் என்னைப் போன்ற நல்ல பையன்களை கூட சேர்த்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. முருகனை தன்னம்பிக்கை அற்ற கோழையாகப் பார்த்தேன். ஓட்டலில் சாப்பிட அழைத்தார்.

வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன். இரண்டு நாட்கள் அவர் என்னை மிகவும் பாதித்தார். பின் மறந்து போனேன்..! என்கிறார் அவர்.

இன்று முருகனைப் போல நிறைய இளைஞர்கள் சில பெண்களிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.