மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன் : மனம் திறந்த பிரபல நடிகை..!

Loading...
மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன் : மனம் திறந்த பிரபல நடிகை..!
தமிழ் ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.1963 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி 460க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் பைரவி என்ற சீரியலில் ரி-எண்டெரி கொடுத்தார். சினிமாவில் நடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.இயக்குனர் ராசா விக்ரம் இயக்கும் ’மாய மோகினி ’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கே.ஆர். விஜயாவை அணுகியபோது ஆரம்பத்தில் நடிக்க மறுத்தார்.

படத்தின் கதையை இயக்குனர் நேரில் சென்று கூறினார். கதையை கேட்ட அவர் இறுதியில் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். மாயமோகினி படத்தில் சக்கரையம்மா என்கிற பெண் சித்தர் வேடத்தில் அவர் நடிக்க உள்ளார்.

சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து நடிகை கே.ஆர்.விஜயா கூறுகையில் நான் சுவாமி மீது அதிக தெய்வ பக்தி கொண்டவள் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மக்களுக்கு தெய்வமாக வாழும் பெண் சித்தர் சக்கரையம்மா பற்றி எனக்கு தெரிந்ததும் அவருடைய கதாபாத்திரத்தை மறுக்க என் மனம் மறுத்தது.

அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வந்தவாசி அருகே உள்ள அதிசயம் குப்பம் கிராமத்தில் நல்ல முறையில் நடந்தாக தெரிவித்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒய்வு நேரங்களில் அங்குள்ள பாண்டு ரங்கன் கோவிலுக்கு கே.ஆர்.விஜயா சென்றுள்ளார்.

தன்னுடைய காட்சிகளை நடித்து ஊருக்கு திரும்பி தன்னுடைய சொந்த செலவில் பாண்டு ரங்கன் கோவிலுக்கு கொடிமரம் அமைத்து கொடுத்தார் கே.ஆர்.விஜயா.
Loading...
tamizilnews. Powered by Blogger.