மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற மாணவிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்

Loading...
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவி ஒருவரை, மருத்துவமனையைச் சேர்ந்த வார்டு பாய் அவருக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி மருத்துவமனையில் அகன்ஷா என்ற 17 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு மருத்துவமனையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள வார்டு பாய் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, மருத்துவமனை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்லை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி பார்ப்பதற்கு கலவர பூமி போன்று காட்சியளித்துள்ளது.

பொது மக்கள் போலீசாரையும் தாக்கியுள்ளனர். இதில் போலீசார் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவி கூறுகையில், அன்றைய தினம் தன்னுடைய தாய் தனக்கு உடைகளை மாற்றிவிட்டு சென்று விட்டார்.அதன் பின் இரவு நேரத்தில் தன்னுடைய வார்டிற்கு வந்த வார்டு பாய் தன்னுடைய உடை முழுவதும் ஈரமாக இருப்பதாகவும் அதனால் உடை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதனால் , மற்றொரு பெண் செவிலியரை அல்லது தன் தாய்யை கூப்பிடுவதாக நான் கூறினேன். ஆனால் அவரோ அவர்கள் யாரும் இல்லை தானே உடை மாற்றி விடுகிறேன் என்று கூறினார்.

அதன் பின் தன் உடையை அவர் மாற்றினார். அப்போது தனக்கு ஒரு வித தயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக எனது படுக்கைக்கு வந்து படுத்துவிட்டேன். பெட்டிற்கு வந்த அவர் தன் உடலில் ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார். அப்போது நான் மயங்கிய நிலையை அடைந்துவிட்டேன். அதை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், காலையில் வந்து பார்க்கும் போது, என் மகளிடன் உடையில் மாற்றங்கள் இருந்தன. அப்போது அவள் எதுவும் கூறாமல் அழுது கொண்டு இருந்தால். அவளைத் தொடர்ந்து கேட்ட பின் நடந்தவற்றை கூறினாள்.

இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது இந்த தகவல் வெளியில் பரவியதால், எங்கள் உறவினர்கள் மற்றும் சிலர் எங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர் என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமி தொடர்பாகவும் விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.