குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!!

Loading...
குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!!*

குழந்தைகளின் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக மற்றும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் டீ, காபியை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முதலில் டீ, காபி போன்ற பானங்களை 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லதாகும். ஏனெனில் டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்க வேண்டும். மேலும் இது பசியைக் குறைக்கிறது.

டீயில் 2 சதவீதம் கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருளாகும்.

மேலும், இது நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தி விடும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படும்.

டீ, ஒரு டையு ரிடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலியுடன் சிறுநீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும்.

மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போக வாய்ப்பு உள்ளது.

டீ நேரடியாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. டீயில் உள்ள அல்கலாய்டின் பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் இரத்தச்சோகை ஏற்படுகிறது.

காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.