நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க இத அடிக்கடி யூஸ் பண்ணுங்க…

Loading...
 
எப்போதும் ஒருவர் தனக்கு வயதாகிவிட்டது என்பதை அவ்வளவு எளிதில் உணரமாட்டார்கள். ஆனால் தலைமுடி நரைத்து வயதாகிவிட்டதை என்பதை வெளிக்காட்டும். உலகில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் நரை முடி. இந்த நரை முடி வயதானவர்களுக்கு மட்டுமின்றி, இளம் தலைமுறையினருக்கும் தான் வருகிறது.

இந்த நரைமுடியை மறைக்க பலரும் ஹேர் டைகள் உபயோகிப்பார்கள். இப்படி கெமிக்கல் நிறைந்த ஹேர் டைகளைப் பயன்படுத்தினால், முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆனால் நரை முடியைப் போக்க ஓர் அற்புத வழி உள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சேஜ் சேஜ் என்னும் மூலிகை நரைமுடியில் இருந்து விடுவிக்கும். இந்த மூலிகையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளான தொண்டைப் புண், உட்காயம், மன இறுக்கம் போன்றவற்றை சரிசெய்வதோடு, பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக்கும். மேலும் இது தலைமுடிக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நூற்றாண்டுகளாக வழுக்கைத் தலையைப் போக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு நரை முடியையும் போக்கும். ஆனால் உடனடியாக பலன் தெரியாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடியின் pH அளவை நிலைப்படுத்தி தக்க வைக்கும் மற்றும் ஸ்கால்ப்பில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தை நீக்கும் மற்றும் நல்ல கண்டிஷனர் போன்றும் செயல்படும்.

தேவையான பொருட்கள்: ஆப்பிள் சீடர் வினிகர் – 1/4 கப் சேஜ் இலைகள் – 1 கையளவு (அல்லது) உலர்ந்த சேஜ் இலைகள் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 கப்

செய்முறை: முதலில் சேஜ் இலைகளை சுத்தம் செய்து, இரண்டாக பிய்த்து ஒரு பௌலில் போட வேண்டும். பின் 2 கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதித்ததும் இறக்கி, சேஜ் இலைகள் உள்ள பௌலில் ஊற்றி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை வடிகட்டி, அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: தயாரித்து வைத்துள்ள கலவையை, தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தெளிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஆப்பிள் சீடர் வினிகரின் துர்நாற்றம் வீசும். ஆனால் தலைமுடி உலர்ந்த பின், அந்த துர்நாற்றம் போய்விடும். இந்த முறையை வாரத்திற்கு பலமுறை பயன்படுத்த வேண்டும். இதனால் விரைவில் நரைமுடி மறைய ஆரம்பிப்பதுடன், முடியும் பட்டுப் போன்று மின்ன ஆரம்பிக்கும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.