மிளகிலே மருத்துவம் ! உங்களுக்கு தெரியுமா ???

Loading...
 
மிளகிலே மருத்துவம் ! உங்களுக்கு தெரியுமா ???
மிளகு
சுறுசுறுவெனும் காரத் தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.

1. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்புஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும்.

2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம்,பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

3. சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நா‌ட்களிலேயே நல்ல குணம் காணலாம்.

4. பசியில்லாமலிருந்தால், ஒரு ஸ்பூன் மிளகை வறுத்துப் பொடிசெய்து கைப்பிடியளவு துளசி இலையைப் போட்டுக் கொதிக்க வைத்து, சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால் சரியாகும்.

5. நன்றாய் சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத் தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்
நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

ஞாபக சக்தியை தூண்டும் வல்லாரை !

குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை துணைபுரியும். ஞாபக சக்தியை தூண்டும் வல்லாரை
சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் போன்ற அமைப்பு, கை வடிவாக விரிந்துள்ள இலை நரம்புகள், நீண்ட இலைக்காம்பு மற்றும் கணுக்களில் வேர்களைக் கொண்டு தரையில் படரும் வளரியல்பைக் கொண்டு வல்லாரையை இனம் காணலாம்.

வேர்த்தண்டுகள் பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை. பூக்கள், மிகச் சிறியவை, இளஞ்சிவப்பு நிறமானவை. ஒரு கொத்தில் தொகுப்பாக 3 முதல் 6 பூக்கள் வரை காணப்படும். பழங்கள், சிறியவை, 7-9 விளிம்புக் கோடுகளுடன் காணப்படும்.

ஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் இந்தத் தாவரம் பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும்.

வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும். மருந்துச் செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்மி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப் பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

வல்லாரை வளர்ப்பது மிகவும் எளிதானது. வேருடன் உள்ள ஒரு வல்லாரைக் கொத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில் நட்டால் சில தினங்களில் படர்ந்து வளரத் தொடங்கும். சாதாரணமாகக் கீரை வியாபாரம் செய்யும் நபர்களிடமும் வல்லாரை கிடைக்கும்.

வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லா ரையை உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகக் கொடுக்கக் கூடாது. மேலும் இதை அளவுக்கு மீறி சாப்பிட்டால் தலைச்சுற்றல், தலைவலி ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும்.

முழுத்தாவரம்: துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. இவை, ஞாபக சக்தியைப் பெருக்கும், நோய் நீக்கி உடலைத் தேற்றும், வியர்வையை அதிகமாக்கும், சிறுநீர் பெருக்கும், மாதவிலக்கைத் தூண்டும், உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம், படை ஆகியவற்றையும் குணமாகும்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் அளவு, தினமும், காலை, மாலை வேளைகள், டம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்துவர வேண்டும் அல்லது பசுமையான 2 இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம். வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும்.

வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில்
Loading...
tamizilnews. Powered by Blogger.