நீங்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா? ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!

Loading...
ஒரு குழந்தை பிறக்கும் போது, குழந்தையின் இராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கணித்து எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் எழுதப்படுகின்றது. இப்போது, மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் இரகசியத்தின் உண்மைகள் என்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்! 27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். 
 
இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும மூலம் நட்சத்திரம் தனுசு இராசிக்கும் உரியதாகும். மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 
 
சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். மூல நட்சத்திர பெண்கள் சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக இருப்பதால், புகுந்த வீடு செல்லும் பொழுது தனது புத்திசாலித்தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் நிர்வாக திறமையும் அதிகமாக இருக்கும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.