5 வருடங்களாக மகளின் இதயத்தை தேடும் பெற்றோர்... நீங்காத மர்மம்: பரிதாபமான கதை

Loading...
இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போன மகளின் இதயத்தைத்தேடி தற்போது வரை பெற்றோர்கள் போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மும்பை சேர்ந்த சனம் ஹாசன் என 19 வயது மாணவி தோழிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய போது மர்மமான முறையில் இறந்தார்.

பிரேத பரிசோதனையில், சனம் ஹாசன் உடலில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நின்று போனதாகவும் சனம் பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சனம் ஹாசனின் பெற்றோர்களான ஜியா ஹாசன், நாகினா ஹாசன் சிபிஐ விசாரணை கோரினர். சிபிஐ நடத்திய பரிசோதனையில் சனம் ஹாசன் உடலிருந்த இதயம் ஒரு ஆணின் இதயம் என கூறப்பட்டது.

சனம் ஹாசனின் இதயம் எங்கே என கேள்வி எழுந்த நிலையில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அதில், பெற்றோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவுக்கும் தொடர்பே இல்லை என தெரியவர விவகாரம் பரபரப்பானது.

பின்னர், ஐதராபாத்தில் நடந்த சோதனையில் இது பெண்ணுக்கான இதயம்தான். ஆனால், வயதான பெண்ணின் இதயம் என கூறப்பட்டது.

இதுகுறித்து சனம் ஹாசனின் பெற்றோர் கூறியதாவது, மருத்துவ அறிக்கைகள் மகள் இதயம் இல்லை என்பது உறுதி செய்திருக்கின்றன. இதனால், மகளின் மரணத்தில் செல்வாக்குள்ள நபர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இதற்கு வலுவான காரணம் இருக்கிறது. அப்படியென்றால் என் மகளின் இதயம் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.