அம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் தெரியுமா?

Loading...
சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறையை தகர்த்து வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சக்கை போடு போட்ட படம் தான் “அம்மன்”.

இந்த படத்தை திரையரங்கில் பார்க்கக் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்றார்கள். 90’களில் பிறந்தவர்கள் பார்த்த கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஒரே திரையரங்கில் ஓடியது இந்த படமாகதான் இருக்கும்.


ஏன் இப்போது தொலைகாட்சியில் இந்த படத்தை ஒளிபரப்பினாலும், சில புதிய படங்களுக்கு இல்லாத TRP கூட இந்த படத்திற்கு கிடைக்கும் என்பது உண்மை.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் இரண்டு கோடி. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 50% தொகையை செலவு செய்துள்ளார்கள் இப்படத்தை தயாரித்த சியாம் பிரசாத் ரெட்டி. இது நேரடி தெலுங்கு படம். தமிழில் வெளியாகி தெலுங்கில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ அதே அளவிற்கு வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் அனைவரும் தங்களில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திஇருந்தாலும். அம்மா பவானி என்ற கதாபாத்திரத்தை ஏற்ற குழந்தை நட்சத்திரம் பேபி சுனையானா.


யார் கண்ணு பட்டதோ..? அம்மன் படமே இந்த குழந்தையின் முதலும் கடைசி படமாக மாறிவிட்டது. ஆந்திராவில் பிறந்த இவர், வெகு நாள் கழித்து தற்போது FRUSTRATED WOMEN என்ற வெப் சீரியசை நடத்தி கொண்டிருக்கிறார்.

பெண்கள் தங்களின் மனவேதனையால் வாழ்வில் படும் கஷ்டங்களை காமெடியாக சொல்லுவதே இந்த வெப் சீரியஸ்.

இந்த வெப் சீரியஸ் ஐடியா இவங்களுக்கு எப்படி வந்ததென்றால் பாகுபலி வில்லன் காலகேயவின் மொழியை கிண்டல் செய்து ஒரு மீம் வீடியோ போல இணையத்தில் உலவ விட்டிருக்கிறார் சுனையனா. அந்த வீடியோவிர்ற்கு கிடைத்த வரவேற்பு தான் இந்த வெப்சீரியசிற்கும் காரணமாக அமைந்து விட்டது.

இந்த வெப் சீரியசின் இரண்டாம் பாடத்தை எடுக்கும் போது கர்பமாகியிருகிறார். ஆனால், அவர் கர்பமானதையே வைத்து “NRI PREGNANT LADY” என்ற ஒரு வீடியோவை போட்டு வைரலாக்கி விட்டார்.இந்த வீடியோவை பார்த்த பலர் பாராட்டினாலும், உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என சில திட்டவும் செய்தார்கள். ஆனால், அதயெல்லாம் கண்டுகொள்ளவில்லை இவர்.

தற்போது, இதனை தொடர்ந்து செய்துவருகிறார். இதெற்கெல்லாம் என் கணவரின் சப்போர்ட் தான் காரணம் என மென்மையாக சிரிக்கிறார் சுனையானா.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.