ராஜ்கிரனை கடுப்பேத்திய காமெடி நடிகர் : போட்டியாக வடிவேலுவை உருவாக்கி கொட்டத்தை அடக்கிய ராஜ்கிரன்!

Loading...
தமிழ் சினிமாவில் சந்திரபாபு, நாகேஷ் மற்றும் கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் வடிவேலு.

வைகைபுயல் என்று அழைக்கப்படும் இந்த வடிவேலுவை நடிகர் ராஜ்கிரன்தான் தன்னுடைய ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு பெரிய சுவாரசியம். தான் தயாரிப்பாளராக இருந்தபோது தனி ரசிகர் வட்டத்தை வைத்திருந்தவர் ராஜ்கிரன்.
அவர் தனது தீவிர ரசிகரான இளங்கோ என்பவரின் திருமணத்தை நடத்தி வைக்க மதுரைக்கு சென்று இருந்தார்.

இளங்கோவின் திருமணம் காலையில் முடிந்தது. ஆனால் ராஜ்கிரனுக்கோ இரவுதான் ரயில்.

இதனால் ராஜ்கிரனின் பொழுது போக்கு மற்றும் பேச்சு துணைக்காக வடிவேலுவை அவருடன் அனுப்பி வைத்தார் இளங்கோ. வடிவேலு நாள் முழுவதும் அவருடனிருந்து சிரிக்க சிரிக்க பேசினார்.

ஆனால் அவரிடம் வடிவேலு சினிமா வாய்ப்பு தருமாறு கேட்கவில்லை. ராஜ்கிரனும் வாய்ப்பு தருவதாக கூறவில்லை.

இந்நிலையில் ராசாவின் மனசில படப்பிடிப்பின்போது காமெடி நடிகர் கவுண்டமணி சம்பளம் கொடுத்தால்தான் வருவார் இல்லையென்றால் வரமாட்டார் என்று மேனேஜர் கூறினார்.

இந்த சம்பவத்தினால் கோபம் அடைந்த ராஜ்கிரன் அவருக்கு போட்டியாக ஒரு நடிகரை உருவாக்க வேண்டும் என்று நினைத்து யோசித்தபோது மனதில் தோன்றியவர் வடிவேலு.

உடனடியாக எப்படியோ இரவோடு இரவாக வடிவேலுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து திண்டுக்கல்லுக்கு வரவழைத்தார். கவுண்டமணிக்கு பதிலாக வடிவேலும் நடிக்க தயாராக இருந்தார்.

ஆனால், அதே நேரம் கவுண்டமணியும் வந்து விட்டார். இதனைக்கண்டு திகைத்து போன ராஜ்கிரன் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த படத்தில் வடிவேலுவுக்காவே ஒரு கேரக்டரை உருவாக்கி நடிக்க வைத்தார்.

அதோடுமட்டுமல்லாமல், அவரை தன்னுடனேயே சென்னை அழைத்து சென்று வைத்து கொண்டார். இதனைதொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்து வளர்த்து விட்டார்.

படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டார் ராஜ்கிரன்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.