உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை இழந்த பில்கேட்ஸ்.. யார் முதலிடம் தெரியுமா?

Loading...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தினைத் தக்க வைத்து வந்த பில் கேட்ஸ் அதனை 2017-ம் ஆண்டு இழந்துள்ளார். இதனால் அந்த இடத்தை யார் பிடித்து இருப்பார்கள் என்று ஆர்வம் வியாழக்கிழமை முதல் சமுக வலைத்தளங்களில் டிர்ண்ட் ஆகியது.

அமேசான் நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 2.4 சதவீதம்வரை உயர்ந்ததை அடுத்து அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.ஜெப் பிசோஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, பில்கேட்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு வியாழக்கிழமை 9 பில்லியன் டாலராக இருந்தது. அமேசான் பங்குகள் உயர்ந்த சில நிமிடங்களில் முதல் இடத்தினை ஜெப் பிசோஸ் பிடித்தார்.

ஜெப் பிசோஸ் அவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் 17 சதவீத பங்குகள் உள்ளது, இது இவருடைய இ-காமர்ஸ் வணிகத்தைக் கிடைத்தது எனலாம். ஆனால் இப்போது கிளவுட் கம்ப்யூட்டிங், இணையதள வீடியோ சேவை, கணினி வன்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய டெக் பிரிவுகளில் அதிகக் கவனத்தினை அமேசான் திருப்பியுள்ளது.

23 மில்லியன் டாலர் கொடுத்து இவர் வாங்கிய பழைய ஜவுளி அருங்காட்சியகம் வாஷிஙடன் டிசி-ல் அமைந்துள்ளது. அதனை இவரது வீடாக மாற்றிய உடன் ஒபாமா மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோர் இவரது பக்கத்து வீட்டுக்காரர்களாக உள்ளனர்.

பேண்டசி திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஸ்டார் டெர்க் ரசிகரான ஜெப் பிசோஸ் சிறிய காதபத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தினைக் கடக்கும் நபர்களுக்குத் தினமும் 4,500 வாழைப்பழங்கள் இலவசமாக வழங்குகின்றார். மேலும் இவருடன் சேர்ந்து இவரது குடும்பமும் பல நலத்திட்ட உதவிகளைச் செய்கின்றனர். ஆனால் தான் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.