அனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…! அசிங்கப்பட்ட காயத்ரி ரகுராம்

Loading...

கடந்த ஒரு வாரமாக தனது அநாகரிகமான செயலால் பலரையும் முகம் சுளிக்க வைத்த நடன இயக்குநர் காயத்ரி ரகுராமின் சில செயல்களை அனைவர் முன்னிலையிலும் வெளிச்சம் போட்டு காட்டிய கமல், காயத்ரி ரகுராமிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். 

பிக்பாஸ் தொடரின் இரண்டாவது வாரம் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் கட்டாயம் வேண்டும் என்றார். அதனைதொடர்ந்து அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார். 

ஆனால் இன்று கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதையும் ஆனால் இதனை மறைக்க நினைத்த காயத்ரி கன்பசன் ரூமில் இருந்து வெளியே வந்து அனைவரிடமும் பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார். 

இதனை சற்றும் எதிர்பார்காத காயத்ரி தனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்றும், அதிலும் குறிப்பாக பிக்பாஸ் கூறிய சீரான என்ற வார்த்தைக்கு தனக்கு உண்மையாகவே அர்த்தம் தெரியாது என்றும் கூறி சமாளித்தார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.