கைக்கு வைக்கும் மருதாணியை தலைக்கு மாஸ்க் ஆக போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Loading...
கூந்தலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பிரச்சனைகள் என்றால், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறண்ட கூந்தல் மற்றும் பல. இவை அனைத்தையும் மருதாணி சரி செய்து கூந்தலுக்கு போஷாக்கு அளிப்பதோடு எந்த ஒரு பாதிப்படையாமல் தடுக்கும்.

மருதாணியை நேரடியாக பயன்படுத்தாமல் அதன் பொடியை வைத்து பல்வேறு மாஸ்க் தயார் செய்து கூந்தலில் தடவுவதால் தலை முடியின் அனைத்து பிரச்சனைகளும் உடனே சரிசெய்யப்படும்.
இந்தக் கட்டுரையில் மருதாணிப் பொடியை உபயோகித்து செய்யப்படும் 6 வகையான ஹேர் மாஸ்க் பற்றிப் பார்க்கக் போகிறோம். வாருங்கள் இப்போது இந்த ஹேர் மாஸ்க்களின் பலன்களையும், எப்படி செய்வதென்ற முறையையும் பற்றி பார்ப்போம்…


மருதாணிப் பொடி மற்றும் க்ரீன் டீ மாஸ்க்
2 ஸ்பூன் க்ரீன் டீ இலையை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய அந்த நீர் ஆறியப் பின்பு 2 முதல் 3 ஸ்பூன் மருதாணிப் பொடியை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கலக்கி வைத்த அந்தக் கலவையை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இந்தக் கலவை முடியை வறட்சி அடையாமல் தடுத்து, எந்த வித அரிப்புத் தொல்லையையும் எளிதில் தடுக்கும்.

மருதாணிப் பொடி மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க்
ஒரு கப் மருதாணிப் பொடியுடன் சிறிது கடுகு எண்ணெய், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 2 ஸ்பூன் தயிர் ஆகியவை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ளவும். இந்த கலவையை கூந்தலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இந்தக் கலவையை கூந்தலுக்கு தேய்ப்பதால் முடி உதிர்வது குறைந்து, நன்கு முடி வளர உதவும். மேலும், கூந்தலுக்கு வலிமை சேர்க்கும்.

மருதாணிப் பொடி மற்றும் வெந்தயம் மாஸ்க்
இரவு தூங்கும் முன் ஒரு கப் வெந்தயத்தை ஊற வைத்து, காலையில் எழுந்து அரைத்து, அத்துடன் ஒரு கப் மருதாணிப் பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்து கூந்தலுக்குத் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் ஆரோக்கியமாக வளரும். மேலும், கூந்தலுக்கு இயற்கை நிறத்தைத் தந்து மிருதுவாக மாற்றும்.

மருதாணிப் பொடி மற்றும் மயோனைஸ் ஹேர் மாஸ்க்
மருதாணிப் பொடியையும் மயோனைஸையும் நன்கு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 முதல் 5 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முடியில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் கூந்தல் வறட்சி அடைவதை எளிதில் தடுக்கலாம். மேலும், பொடுகுத் தொல்லை ஏற்படாமலும் தடுக்க முடியும்.

மருதாணிப் பொடி மற்றும் முட்டை வெள்ளைக் கரு மாஸ்க்
ஒரு கப் மருதாணிப் பொடியுடன் முட்டையின் வெள்ளைக் கரு, 10 ஸ்பூன் தயிர், 5 முதல் 6 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைக்க வேண்டும். மிதமான சூடுள்ள தண்ணீரில் நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். இது முடியை வலுவாக்கி உதிராமல் தடுக்கும். மேலும், பொடுகுத் தொல்லையை முற்றிலும் அழித்துவிடும்.

மருதாணிப் பொடி மற்றும் நெல்லிக்காய் மாஸ்க்
ஒரு கப் மருதாணிப் பொடி, ஒரு கப் நெல்லிக்காய் பொடி, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக செய்துக் கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முடிக்குத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து மிதமான சூடுள்ள தணணீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி வளர்வது அதிகரிக்கும். மேலும் கூந்தலின் தன்மையும் மாறி அழகானத் தோற்றத்தைக் கொடுக்கும் மற்றும் முடி உதிர்வதை தடுக்கும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.