பற்களின் மஞ்சள் கறையை போக்கி வெள்ளையாக்க இந்த ஒரே ஒரு பொருளை கையில் எடுங்க!!

Loading...
நீங்கள் உங்கள் பற்களை வெண்மையாக்குவதற்கு எல்லா இயற்கை முறைகளையும் பயன்படுத்தி இருப்பீர்கள்.ஆனால் கரித்தூள் கொண்டு வெண்மையாக்கும் ஒரு முறையை உங்களுக்கு தமிழ் போல்டு ஸ்கை இங்கே சொல்லுகிறது.

எல்லாருக்கும் தெரியும் கரித்தூள் உணவு நச்சுக்கள் மற்றும் பித்த பிரச்சினை போன்றவற்றை சரியாக்கும் அதுமட்டுமல்ல இது உங்கள் பற்களையும் வெண்மையாக்கி விடும்.

செயலாக்கப்பட்ட கரித்தூள் சுவையற்றது, மணமற்றது, இது பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் இருக்கும் இதில் எதுவும் இல்லை என்று நினைக்க தோன்றும் ஆனால் இதில் நிறைய நன்மைகள் பொதிந்து கிடக்கிறது.


செயலாக்கப்பட்ட கரித்தூள் என்றால் என்ன?

இந்த கரித்தூள் கரிமச்சத்து நிறைந்த பொருட்களான தேங்காய் உமி, கரி, தென்னை, மரக்கட்டை. லிக்னைட், மரவீடு மற்றும் பெட்ரோல் பிரித்தெடுக்கும் வேதி மற்றும் இயற்பியல் மாற்றம் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது. செயலாக்கப்பட்ட கரித்தூள் எப்படி பற்களின் மீது செயல்படுகிறது

இந்த கரித்தூள் நிறைய துளைகள் நிறைந்தது. எனவே இது நமது பற்களின் இடுக்குகளில் ஈஸியாக சென்று பற்களில் உள்ள அழுக்கு, தகடுகள் மற்றும் மஞ்சள் படலம் போன்றவற்றை வெளித் தள்ளுகிறது. இதில் இயற்கையாகவே ஒட்டும் தன்மையும் கொண்டு உள்ளது.

நீங்கள் தொடர்ந்து இந்த கரித்தூளை பயன்படுத்தினால் உங்கள் பற்களின் நிறம் மாறுவதை காணலாம். நீங்கள் பற்சொத்தை, பல்லரிப்பு கொண்டு இருந்தால் போன்றவற்றிற்கு இது பயன்படாது.

எப்படி செயலாக்கப்பட்ட கரித்தூளை பெறுவது.

இந்த கரித்தூள் எல்லா மருந்துக் கடைகளிலும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. பற்களை வெண்மையாக்குவதற்கு என்று கேட்டால் போதும். இதை வாங்கி ஒரு மாத்திரையை பொடியாக்கி அதைக் கொண்டு பல்துலக்கினால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.

செயலாக்கப்பட்ட கரித்தூள் டூத் பேஸ்ட் தயாரிப்பது எப்படி

1. முதலில் உங்கள் அருகில் இருக்கும் மருந்து கடைகளிலிருந்து கரித்தூள் மாத்திரைகளை வாங்கிக் கொள்ளவும்.

2. ஒரு முறை பயன்படுத்துவதற்கு ஒரு மாத்திரையை பொடி பண்ணினால் போதும்

3. பொடி பண்ண மாத்திரையை தண்ணீருடன் கலந்து நன்றாக பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும்

4. பிறகு நீங்கள் தினமும் சாதாரணமாக எப்படி பல்துலக்கி வாயை நீரில் கொப்பளிப்பீங்களோ அதே மாதிரி இந்த பேஸ்ட் டை பயன்படுத்த வேண்டும்.

5. இந்த பேஸ்ட்டை பிறகு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இதை தயாரித்து காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொள்ளவும்.

6. அப்பப்ப பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தால் ஒரு முறைக்கு ஒரு மாத்திரை என்று தயார் செய்து கொள்ளுங்கள்.

கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்

1. கரித்தூளை பல் தேய்க்கும் போது விழுங்கக் கூடாது

2. கரித்தூள் மாத்திரைகளை அதன் காலாவதி தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

3. இந்த முறையை பயன்படுத்தும் போது எதாவது பிரச்சினை ஏற்பட்டால் விட்டு விடவும்.

4. எதாவது வாயில் மற்றும் பற்களில் பிரச்சினை இருந்தால் இதை செய்யக் கூடாது.

5. பிரஷ் அல்லது கைகளை பயன்படுத்தியோ இந்த முறையை செய்யலாம்

6. நீண்ட நேரம் பற்களில் தேய்க்க கூடாது இது உங்கள் எனாமலை பாதித்து விடும்

7. ஒரு நாளைக்கு ஒரு முறை தான் தேய்க்க வேண்டும். வேண்டுமென்றால் ஒரு தடவை சாதாரண பற்பசை இன்னொரு நேரம் கரித்தூள் பற்பசை என்று பயன்படுத்தி கொள்ளலாம். என்னங்க இந்த டிப்ஸ்யை பயன்படுத்தி உங்கள் பற்களை முத்து போல் ஜொலிக்க வையுங்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.