சினிமாவை விட்டே விலகிய போக்கிரி குண்டு பையன்..! இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Loading...

போக்கிரி மற்றும் பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் மாஸ்டர் பரத். சென்னையை சேர்ந்த இவர் வேளாங்கண்ணி பள்ளியில் படிக்கும்போது பல்வேறு கல்சுரல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்துவார். இதனை பார்த்த இயக்குனர் ஒருவர் தனது நைனா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

பஞ்சதந்திரம் படம் இவரை அடையாளப்படுத்தியது, போக்கிரி படம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வளர்ந்து வாலிப வயதை எட்டி உள்ளார்.

கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவின் தம்பியாக நடித்து இருந்தார். தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும், அதனை ஏற்று கொள்ளாமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். மேலும் தற்போது ரோபோட்டிக் சம்பந்தமான படிப்பு படித்து வருகிறார். இதனை முடித்த உடன்தான் அடுத்து நடிப்பது குறித்து முடிவு செய்வாராம்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.