கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

Loading...
ஒவ்வொரு தம்பதிகளுக்கும் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம் எழும். இதுக்குறித்து பலரும் பலவிதமாக கூறுவார்கள். யார் சொல்வது உண்மை என்று தெரியாமல் பலர் குழப்பத்தில் இருப்பார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இங்கு கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உண்மை #1
கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில், சிசுவின் அனைத்து உறுப்புக்களும் வளர ஆரம்பித்திருக்கும். இக்காலத்தில் அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டால், பின் மிகுந்த சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். ஏன் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது.


உண்மை #2
கர்ப்பத்தின் இறுதி மாதத்தில், பாதுகாப்பில்லாத உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பனிக்குடநீர் உடைந்து, தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதோடு குறைப்பிரசவம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

உண்மை #3
குழந்தை பனிக்குட பையினுள் தான் பாதுகாப்பாக இருக்கும். ஒருவேளை அதிகப்படியான நகர்வு மற்றும் அதிர்வு ஏற்பட்டால், அப்பையில் பாதிப்பு ஏற்பட்டு, கர்ப்பிணி பெண் கடுமையான வலியை அனுபவிப்பதோடு, குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

உண்மை #4
கர்ப்ப காலத்தில் கொஞ்சல் மற்றும் முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால், கர்ப்பிணிகளின் மனநிலை மேம்பட்டு, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

உண்மை #5
கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதாக இருந்தால், வயிற்றில் அழுத்தம் கொடுக்காதவாறான நிலையில் உறவில் ஈடுபடலாம். மேலும் கர்ப்ப காலத்தில் யோனியில் வறட்சி ஏற்படும் என்பதால், உயவுப் பொருளைப் பயன்படுத்துவது நல்லது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.