சினேகன் அனைவரையும் கட்டிபிடிக்கும் காரணம் தெரியுமா? - மனம் திறக்கிறார் ரஞ்சித்

Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள கவிஞர் சினேகன், அதில் உள்ள பெண்களை அதிகமாக கட்டிப்பிடித்து வருகிறார் என்பது குறித்து சர்ச்சை தற்போது வரை நிலவி வருகிறது.

என்னதான் தோழிகளாக இருந்தாலும், கட்டிப்பிடிப்பது என்பது அதிகமாக நடந்து வருகிறது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து சினேகனின் நண்பனும் நடிகருமான ரஞ்சித் கூறியதாவது,

நாம் ஒருவரைப் பார்க்கும்போது எப்படி கையெடுத்துக் கும்பிடுறோம், வணக்கம் சொல்கிறோமோ அதே மாதிரிதான் கட்டிப்பிடிப்பதும் ஒரு வகைப் பழக்கம். இப்படி அரவணைப்பைக் கொடுக்கும்போது அதை நாம் தவறாகப் பார்க்கக்கூடாது. அது அவர்களுக்குள் உள்ள நீண்ட பயணத்துக்கான ஓர் அடையாளம்.
 

பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்தால்தான் தவறு. பழகியவர்களுக்குள் இப்படி நடந்துகொள்வது மிக சாதாரணம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகனை அவர்கள் ஒரு தகப்பனாகவோ, சகோதரனாகவோ உணரலாம். பிக் பாஸில் மட்டும் அல்ல உண்மையிலேயே சினேகன் தன் நேசத்துக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பது அவரது இயல்பு.

நிகழ்ச்சியில், அவர்கள் பேசுவது பழகுவது அனைத்தையும் காட்டுவதில்லை. சுவாரஸ்யமான சில காட்சிகளை மட்டும்தான் தொகுத்து வழங்குகிறார்கள். அப்போது நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்... மீதி இருக்கும் நேரத்தில் எப்படி இருந்திருக்கும் அவர்களது உறவு என்று.

அதுதான் அவர்களுக்குள் நடக்கும் அன்பின் பரிமாற்றத்துக்குக் காரணம். அவரிடம் பழகியதில் எனக்கு தெரியவந்தது அவர் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அப்படித்தான் கட்டிப்பிடிப்பார் என்று கூறியுள்ளார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.