ஓவியாவையும் அழ வைத்தார் ஜூலி… பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுகிறார் ஓவியா !!

Loading...

தன்னம்பிக்கையான பேச்சுகள் மூலம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள நடிகை ஓவியாவையும் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அழ வைத்துள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சி குறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள பிரமோ வீடியோவில் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து ஜூலியை உடனே வெளியேற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் சக போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை வெறுக்கும் பட்சத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது பிக்பாஸின் விதிமுறைகளில் ஒன்று என்று ஜூலி கூறுவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து தன்னை டார்கெட் செய்வதால் ஓவியா அழுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஜூலி தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.