இந்த காரணத்துக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு தேவையில்லை: கமல்ஹாசன் அதிரடி!

Loading...
இனிமேல் இது போன்று நடந்தால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் செட் அமைப்பதற்கு பிளம்பர் வேலை செய்த ஹரீம் ஷேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். அதன் பிறகு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைத்தியக்காரர்களாக நடித்த அந்த டாஸ்க் எனக்கு பிடிக்காத ஒன்று. யாரையும், அப்படி நடிக்க வைக்கக்கூடாது. நான் நடித்தேன் என்றால், என்னை ஹீரோவாகத்தான் காண்பித்தார்கள் என்றார்.


இதனைத் தொடர்ந்து கமல், இது போன்று மற்றொரு சம்பவம் நடந்தால், எனக்கு பிக்பாஸ் முக்கியமில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்தவற்றை பார்த்த கமல் மன அழுத்தம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சித்த ஓவியாவிடம் பேசிய பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் பேச வந்த ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கர கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.