பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சக்தி! காயத்ரியின் நிலைமை இனி பரிதாபம்..

Loading...
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நபர் சக்தியாக தான் இருக்கும் என தெளிவாக தெரிகிறது.
இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க வேண்டும் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கூறியிருந்தார்.

ஆனால் மொத்தம் உள்ள 8 போட்டியாளர்களில் ரைசா மட்டும் சரியான காரணங்களை கூறியதால் அவர் மட்டும் வெளியேற்றப்படும் பட்டியலில் இடம்பெறவில்லை.

மற்ற 7 போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றனர். இந்நிலையில் வையாபுரியை ஹவுஸ்மேட்கள் சேர்ந்து காப்பாற்றினர். பிக்பாஸ் கேட்ட 5 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்ததன் மூலம் காயத்ரி காப்பாற்றப்பட்டார்.

அதே போல பிந்துமாதவி, கணேஷ் வெங்கட்ராமன் காப்பாற்றப்படுவதாக கமல் இன்று அறிவித்தார்.

இந்த வரிசையில் மிச்சம் இருக்கும் ஆரவ், சினேகன், சக்தி ஆகியோரில் சக்தி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் மற்றவர்களை விட சக்தி குறைவான வாக்குகளை இணையதள வாக்கு சேகரிக்கும் பக்கத்தில் தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.