ஓவியா பற்றி சிம்பு போட்ட அதிரடி டிவிட்...

Loading...
 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் சதீஷ். இவர் நடன நடிகராகவும், நடன இயக்குனராகவும் உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பல கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். அதில், ஜூலி, காயத்திரி, ஓவியா உள்ளிட்ட பலரையும் விமர்சனம் செய்து வந்தார். 

ஒரு டிவிட்டில் “ பிக்பாஸ் நிகழ்ச்சியை காய்த்ரி ஒரு விளையாட்டாகத்தான் பார்க்கிறார். சக்தி பி.வாசுவின் மகன் என்பதால்தான் அவரிடம் காயத்ரி பேசுகிறார். மேலும், அவர் சொல்வதை கேட்கிறார்” எனக் குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிம்பு “ யாரையும் திட்ட வேண்டாம். நமக்கு யாரை பிடித்திருக்கிறதோ, அவருக்கு ஆதரவு அளிப்போம். எல்லோரும் இதை புரிந்து கொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.  

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.