உலகையே ஆட்டிப்படைத்த ப்ளுவேல் கேமின் அட்மின் ஒரு சிறுமி சற்றுமுன் கைது செய்யபட்டார்

Loading...
 ரஷ்யாவை சேர்ந்த அந்த பெண்ணின் வயது 17. ப்ளு வேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்தவர் என்ற அதிர்ச்சிகரமானதகவல் வெளி வந்திருக்கிறது. 

கைது செய்யப்பட்ட இந்த சிறுமி, கொடுக்கப்பட்ட டாஸ்க்களை முடிக்காவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என்று காவல் துறை தெரிவித்திருக்கிறது. 

இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் மிரட்டி தினமும் ஒவ்வொரு டாஸ்க்களையும் செய்ய சொல்வார்கள். இறுதியாக 50 வது டாஸ்கில் அவர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டி தற்கொலை செய்ய வைப்பார்கள். 

உலகம் முழுவதும் இதுவரை 130 பேர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  ரஷ்யா போலிஸ் இது தொடர்பாக சில வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள் . இந்த விளையாட்டை உருவாக்கிய 21 வயது இளைஞர் மாஸ்கோ அருகே இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 ரஷ்ய காவல்துறை கொடுத்த தகவல்படி கைது செய்யப்பட்ட 17வயது சிறுமியும் ஆர‌ம்பத்தில் ப்ளுவேல் விளையாடியவர்தான் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.