100 கோடியை உதறித்தள்ளிவிட்டு துறவறவம் செல்லும் தம்பதி!

Loading...
ஒரு மில்லியன் எதிரிகளை வென்றெடுப்பதைவிட தன்னையே வென்றெடுப்பது சிறந்தது என்று மகாவீரர் சொன்னது போல தன்னை தானே வெல்ல முயற்சி செய்யும் தம்பதிகள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதிகள் தங்கள் 3 வயது மகள் மற்றும் 100 கோடி சொத்துக்களை விட்டுவிட்டு, துறவிகள் ஆக முடிவெடுத்துள்ளனர். சுமித் ரத்தோர், வயது 35 மற்றும் மனைவி அனிகா, 34 இவர்கள் இந்த மாதம் 23ம் தேதி சூரத் நகரில் தீட்சை எடுத்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். 


தந்தையின் தொழிலை சுமித் கவனித்து வந்த நிலையில், அனாமிகா ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐ.டி துறையில் பணியாற்றினார். கோடீஸ்வரர்களான இவர்களின் குடும்ப சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில், குழந்தை, குடும்பம் மற்றும் சொத்துக்களை துறந்து துறவறம் மேற்கொள்வதாக சுமித் ரத்தோர் மற்றும் அனாமிகா அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனாமிகாவின் தந்தை கூறுகையில், மகள் மற்றும் மருமகனின் துறவறம் முடிவை தடுக்க முயன்றும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

தங்களின் ஆத்ம திருப்தி மற்றும் உள்ளுணர்வு உந்துதலால் இதை செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் விருப்பத்தை எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.