டி20-போட்டியில் பெற்ற பிராம்மாண்ட வெற்றி, ஆஸ்திரேலியா சாதனையை அடித்து நொறுக்கிய இந்திய அணி.

Loading...
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியை விளையாடியது. 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்த நிலையில், நேற்று 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

இதன் மூலம், ஒரு தொடரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி20 போட்டி) தோல்வியை சந்திக்காமல் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. 

ஒரு தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது. 

இந்த வெற்றியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.