டி20-போட்டியில் உலக சாதனை படைத்த கேப்டன் விராட் கோலி.

Loading...
இந்திய கேப்டன் விராட் கோலி தனது மற்றொரு சிறப்பான ஆட்டத்தை நேற்றைய டி20-போட்டியில் வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினார்.

நேற்றைய ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் 2.4 வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

பின்னர், களமிறங்கிய விராட் கோலி ராகுலுடன் இணைந்து ரன்ரேட் குறையாத வண்ணம் அடித்து ஆடினர். 18 பந்துகளில் 24 ரன்களை எடுத்த லோகேஷ் பிரசன்னா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய மணிஷ் பாண்டேவும், கோலியும் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்த போது விராட் கோலி 82 ரன்களில் கேட்ச் ஆனார்.இவ்வளவு சிறப்பாக விளையாண்ட விராட் கோலி இலக்கை துரத்துவதில்  அதிக ரன்கள் எடுத்து பிரெண்டன் மெக்கல்லம் அவர்களை தாண்டி உலக சாதனை படைத்தார்.  பிரெண்டன் மெக்கல்லம் 1006 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் விராட் 1016 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். 

நான்கு இலக்க ரன்களை எடுத்தது இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  இலக்கை துரத்துவதில் முதல் 5 இடத்தில இருக்கும் வீரர்கள் தகவல் இதோ.


Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.