தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க போகும் கமல்ஹாசன் - அதிரடி அறிவிப்பு

Loading...
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வந்தது. இந்நிலையில் எந்த நேரத்திலும் அவர் கட்சி தொடங்கலாம் என பேசப்பட்டு வந்தது. 

நடிகர் கமல்ஹாசன் தி குயின்ட் இணையதளத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

என்னை சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம்.நான் சந்தர்ப்பவாதிதான். இதுதான் தீவிர அரசியலில் ஈடுபட சரியான வாய்ப்பு. காரணம் அனைத்துமே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. 

நமக்கு சிறந்த அரசு தேவைப்படுகிறது. நான் அவசரகதியில் தீர்வுகள் கிடைத்துவிடும் என சொல்லவில்லை. மாற்றத்தை முன்னெடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள். 

அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இந்த நிகழ்வு எனது விருப்பத்தின் படி நடக்கப்போவதில்லை, கட்டாயத்தின்பேரில் நடக்க இருக்கிறது.

அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது’என அவர் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் அவர் தனிக்கட்சி தொடங்கபோவது உறுதியாகி இருக்கிறது. இதை அவர் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
Loading...
tamizilnews. Powered by Blogger.