தமிழ்நாட்டில் விவேகம் படம் நஷ்டமா? - பரபரப்பு பேட்டி கொடுத்த விநியோகஸ்தர்

Loading...
கடந்த வியாழன் ஆகஸ்ட் 24ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக தல அஜித் அவர்களின் படம் வெளியானது. 
படத்தில் ரசிகர்களுக்காக தல அஜித் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருந்தார். இதனை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்த ரசிகர்கள், அஜித்தின் நடிப்பை பற்றி மிக பெருமையாக பேசி வந்தார்கள். முக்கியமாக  அஜித்தின் உழைப்பு, தொழில்நுட்ப விஷயங்கள் என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 
இந்த படமும் 2 நாட்களிலேயே ரூ. 100 கோடி வரை வசூலித்ததாக செய்திகள் வெளிவந்தது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது என்னவென்றால் அஜித்தின் விவேகம் படம் நஷ்டம் அளித்துள்ளதாக தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஸ்ரீதர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். 

அவர் கூறுகையில், விவேகம் நல்ல படம் என்றாலும் வசூல் ரீதியாக லாபம் தரவில்லை. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு படத்தால் 40% முதல் 50% நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அஜித் மற்றும் பட தயாரிப்பாளர்கள் ஈடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.