தைராய்டு பிரச்சனையை நீங்களே சரி செய்யலாம் அருமையான வழி இதோ

Loading...
தற்போதைய காலத்தில், பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சனை காரணமாக பெரிதும் அவஸ்தைப் படுகின்றார்கள்.

தைராய்டில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் பல்வேறு முக்கிய செயல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

எனவே இந்த தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கு, சூப்பரான டிப்ஸ் இதோ!

*தேங்காய் எண்ணெய்*

தினமும் தேங்காய் எண்ணெயை ஒரு டேபிள் ஸ்பூன் குடித்து வந்தால், தைராய்டு சுரப்பி ஊட்டம் அடையும். மேலும் தைராய்டு சுரப்பி மற்றும் செரிமான மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

*எலும்பு குழம்பு*

ஆட்டு எலும்பை குழம்பு வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள், தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*கடற்பாசி மற்றும் கடற்பூண்டு*

கடலில் கிடைக்கும் கடற்பாசி மற்றும் கடற்பூண்டில் அயோடின் சத்துக்கள் மற்றும் சக்தி வாய்ந்த சில உட்பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே கடற்பாசியை சூப் செய்து அடிக்கடி குடித்தால், தைராய்டு பிரச்சனை ஏற்படாது.

*உடற்பயிற்சி*

தினமும் நாம் யோகா, தியானம் போன்ற மனதிற்கு அமைதியை தரக்கூடிய உடற்பயிற்சிகளை செய்வதுடன், அன்றாடம் க்ளூட்டன் உணவுகள் மற்றும் விட்டமின் A, D, K, போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.