இந்திய கிரிக்கெட் வீரர் இலங்கையில் திடீர் மரணம்!

Loading...
இந்திய அணி இலங்கையில் சுற்றுபயணம் செய்து ஒருநாள் தொடர், மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே பெறாமல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் பிறகு இப்படி ஒரு சோக செய்தி வந்திருக்கிறது.
 
இலங்கையில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள 19 இந்திய இளம் வீரர்கள் அங்கு சுற்றுபயணம் செய்ய சென்றிருக்கிறார்கள். 

இந்நிலையில் விளையாட சென்ற 19 இளம் வீரர்களில் ஒருவர் பிரபல ஓட்டலில் நீச்சல் குளத்தில் குளித்துகொண்டிருந்த பொழுது நீரில் மூழ்கி இறந்ததாக செய்தி வந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
 
இந்த விபத்து நடைபெற்ற பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உடல்ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இலங்கையில் இப்படி ஒரு சோக செய்தி கிடைத்திருக்கிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.