“ஐயமிட்டு உண்” என்ற பெயரில் பசியில் வாடுவோருக்கு குளிர்சாதனப் பெட்டி உதவியுடன் இலவச உணவு

Loading...
சென்னை பெசன்ட் நகர் 4 வது மெயின் சாலையில் உள்ள டென்னிஸ் க்ளப்பின் முன்புறம் மருத்துவர். இஷா ஃபாத்திமா ஜாஸ்மின் என்பவர் கடந்த 20 ஆம் தேதி முதல் ஒரு உணவுப் பெட்டகம் (ஃப்ரிட்ஜ்) ஒன்றை நிறுவி உள்ளார். உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகக் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது இந்த ஃப்ரிட்ஜில் ஐயமிட்டு_உண் என்று எழுதப்பட்டுள்ளது.


இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது இந்த #ஐயமிட்டு_உண் என்ற திட்டம் உணவுகளை வைப்பவர்கள் ஏனோ தானோவென்று வைத்துவிட முடியாது உணவு நேர்த்தியாக பார்சல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த உணவு எப்போது தயார் செய்யப்பட்டது, எந்தக் காலத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் குறித்து, தங்களது பெயருடன் குறிப்பிட வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டிக்குள் அதற்கென்று ஒரு நோட்டு புத்தகம் உள்ளது சமைக்கப்படாத இறைச்சி, திறந்தவெளி உணவுகள், பாதி உண்ணப்பட்ட உணவுகள் மதுபானங்கள், காலாவதியான உணவு ஆகியவற்றை வைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. உணவுகளைத் தவிர, புத்தகங்கள், ஆடைகள், காலணிகள், பாத்திரங்கள் என மற்றவர்களுக்கு பயனுள்ள இதர பொருள்களையும் வைத்து செல்லவும் ஏற்பாடு உள்ளது.

தெரிந்துக்கொள்ளுங்கள் - அனைவருக்கும் பகிருங்கள்

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.