பள்ளி மாணவியை கற்பழித்து கருவை கலைத்த பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியர் - இந்த பிசாசுகளை என்ன செய்யலாம்

Loading...
மாணவி ஆசிரியர் உறவை கொச்சைபடுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் அஜித்கார்க்கில் உள்ள தனியார் பள்ளியில் ஜெக்தீஷ் என்ற இயக்குனரும், ஜகாத் சிங் என்ற ஆசிரியரும் சேர்ந்து 12-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து பல முறை அந்த பள்ளி மனைவியிடம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கர்ப்பம் அடைந்த மாணவியை இருவரும் ஷாக்புராவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்து உள்ளனர். 

 
கருக்கலைப்பு செய்யப்பட்டதால் அந்த மாணவியின் உடல் நிலை மோசமானது. அதிக ரத்த போக்கு இருந்ததால் பெற்றோர் அஜீத்கர் நகரத்தில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர் செய்த சோதனையில் பல முறை பலாத்காரம் செய்ததும் கருக்கலைப்பு செய்ததால் தான் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மாணவி ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய நிலையானது மிகவும் மோசமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளியின் இயக்குனர் மற்றும் ஆசிரியருக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறது. இதை அறிந்த

இரு குற்றவாளிகளும் தலைமறைவு ஆகிவிட்டனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் குற்றவாளிகளை தேடி வருகிறது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.