கொட்டும் மழையில் விடிய விடிய மகனின் சடலத்துடன் சாலையில் பரிதவித்த தாய்

Loading...
தெலுங்கானா: ஐதராபாத்தில், மகனின் சடலத்துடன், இரவு முழுவதும், சாலையில் தவித்த தாய் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத் வெங்கடேஸ்வரா காலனி குக்தபள்ளியில்  வசித்து வரும், ஈஸ்வரம்மா என்பவரின், 10 வயது மகன், டெங்கு காய்ச்சலால், மருத்துவமனையில் இறந்தார். ஈஸ்வரம்மா, மகனின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து, வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆனால், வீட்டின் உரிமையாளர், ஜெகதீஷ் குப்தா, உள்ளே அனுமதிக்கவில்ல. 
இதனால் இரவு முழுவதும் கொட்டும் மழையில் வெளியே நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். விடியும் வரை கொட்டும் மழையில் நின்ற அவரை காலையில் பார்த்த சிலர் வீட்டு உரிமையாளரிடம் தங்கள் கோபத்தை காட்ட தொடங்கினர். 
இந்த தகவலறிந்த போலீசார், உடனடியாக அங்கு வந்து  வீட்டு உரிமையாளரை எச்சரித்தனர். இதையடுத்து, நேற்று காலை, உடலை வீட்டுக்குள் எடுத்து வர, அவர் அனுமதித்தார். புகார் எதுவும் வராததால், அவர்  மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.
 
விடிய விடிய கொட்டும் மழையில் மகன் சடலத்துடன் சாலையில் நின்ற பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.