மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா! - இதோ அவரே சொன்ன தகவல்

Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தனது குணாதிசயம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இதனால், அவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமானது.

ஓவியா ஆர்மி, ஓவியே நேவி என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் குழுக்கள் ஆரம்பித்து அவரை கொண்டாடினர். இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறினார். மீண்டும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், அவர் மறுத்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் செட்படம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள். இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியும் இதுதான். அன்றைய நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ட்விட்டரில் ஓவியா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘லைவ் சாட் வேண்டும் என நிறைய பேர் ட்வீட் செய்துள்ளதை பார்க்கிறேன். உங்களை போலவே நானும் ஒன்றை செய்ய ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். பிக்பாஸ் 100 வது நாள் முடிந்தததும் சாட் செய்யலாம்’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

இந்த செய்தி பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும். மேலும் பல செய்திகளை படிக்க கீழே பார்க்கவும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.