இது தான் சிறந்தது என்று இப்படிதான் எமாற்றபடுகிறோம் - அதிர்ச்சிகரமான உண்மை

Loading...
ரீஃபில் தீர்ந்துபோச்சுன்னா கடை கடையா ஏறி ரீஃபில் வாங்கிப்போட்டு பயன்படுத்திய காலங்கள் உண்டு. 5 ரூபாய் பால்பாயின்ட் பேனாவிற்கு 3 ரூபாய் ரீஃபில் விலை இருக்கும். இருந்தாலும் அதனை வாங்கிப்போட்டு பயன்படுத்தியது ஒரு காலம்.

அப்படிச்செய்தது பணத்தின் அருமை தெரிந்தோ அல்லது சிக்கனம் கருதியோ அல்லது ரீஃபில்கள் கிடைக்கின்றதே என்றோ வைத்துக்கொள்ளலாம். இப்போதெல்லாம் பெரும்பாலும் யூஸ் அன்ட் த்ரோ எனும் நிலையில் தான் தயாரிப்புகளே வருகின்றது.10 ரூபாய் பால்பாயின்ட் பேனாவை ரீஃபில் முடிந்து போய் தூக்கிப் போட்டுவிடலாம். தொகை சிறியது. ரீஃபிலை கடைகடை யாக ஏறி தேடி அலைய வேண்டும். நேர விரையம். சரி அதனை தூக்கி எறிவதில் ஒரு லாஜிக் இருக்கின்றது என்‍ேற வைத்துக்கொள்வோம்.. ஆனால் இதுதான் யூஸ் அன்ட் த்ரோவின் ஆரம்பப்புள்ளியானது என்று நமக்கு அப்போது தெரியாமல் போனது. இதே முறையை தற்போது எல்லாவற்றிற்கும் கொண்டு வந்து விட்டார்கள். அந்த முறைக்கு நாமும் நம்மை தயார்படுத்திக்கொண்டுவிட்டோம் என்பதுதான் மனவியல்சார்ந்த உண்மை.
இப்போது வரும் பெரும்பாலான எலக்ட்ரானிக் அன்ட் எலக்ட்ரிக்கல் பொருட்கள் எல்லாம் அது எவ்வளவு விலையாக இருந்தாலும் யூஸ் அன்ட் த்ரோ எனும் முறையில்தான் வடிவமைக்கப்படுகின்றது. அப்படியே அது ரிப்பேராகி அதனை சரிசெய்து பயன்படுத்த நினைத்தாலும் சர்வீசுக்கு ஆகும் செலவு அந்த பொருளின் பாதி விலையை தொடுகின்றது. அதனாலேயே அந்தப்பொருளை சிலர் தூக்கி எறிந்துவிட்டு வேறு புதிய பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இதே நிலைதான் இப்போது மொபைல்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. முன்னரெல்லாம் 1வருடம், 2வருடம் பயன்படுத்திய மொபைல் ஃபோன்களில் (இப்போதும் சில மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றது) பேட்டரி சார்ஜ் ஏறாமல் செயலிழந்துபோனால் வேறு பேட்டரியை வாங்கி பொருத்தி பயன்படுத்திக்கொண்டு வந்தோம். ஆனால் இப்போது ‍பெரும்பாலான மொபைல்கள் இன்பில்ட் பேட்டரியுடன் தான் வருகின்றது. அதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 2 அல்லது 3வருடங்கள் மட்டுமே.

அது 50 ஆயிரம் பெறுமானமுள்ள மொபைலாக இருந்தாலும் இதுதான் இன்றைய தயாரிப்பின் நிலை. 2 வருடங்கள் பயன்படுத்திய பின்னர் பேட்டரி சார்ஜ் ஏறாமல் போனாலோ, அல்லது சீக்கிரம் சார்ஜ் இறங்கிப்போனாலோ வேறு பேட்டரி மாற்ற வேண்டும் என சர்வீஸ்சென்டருக்குப் போனால் மொபைல் விலையில் பாதி ரேட் பேட்டரிக்கும் சர்வீஸ் செய்து கொடுப்பதற்கும் கேட்கின்றார்கள்.. அப்படியே பணத்தை செலவு செய்து அந்த மொபைலை பயன்படுத்த நினைத்தாலும் அந்த மொபைல் எத்தனை மாதங்களுக்கு செயல்படும் என உறுதியாக கூறமுடியாது..

ஆக தயாரிப்பாளர்களின் நோக்கம் ஒரு பொருளை தயாரித்தால் அதன் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் தான். அப்படியான தயாரிப்புகள் தான் இப்போது சந்தைப்படுத்தப் படுகின்றது. அதன்பின்னர் அதனை சரிசெய்வதற்கு பயனீட்டாளர்கள் முயற்சிக்கக் கூடாது. அப்படியான ஒரு மனோ நிலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தி அதிலும் இந்த தயாரிப்பாளர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள்.

நாமும் பால்பாயின்ட் பேனாவில் ஆரம்பித்து இன்று ஆயிரக்கணக்கில் மதிப்புடைய மொபைலையும் இன்ன பிற கேட்ஜட்டுகளையும் பயன்படுத்திய பின்னர் தூக்கி எறியக்கூடிய அளவிற்கு மனநிலையை மாற்றிக் கொண்டோம். இதனை காலத்தின் கட்டாயம் எனச்சொல்வதா? தயாரிப்பாளர்களின் சூட்சுமம் என எடுத்துக்கொள்வதா? பொருளாதார நிலையில் நாம் மேம்பட்டுவிட்டோம் என எடுத்துக்கொள்வதா?

எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி பயன்படுத்தி நாடு முழுவதும் டன் கணக்கில் தூக்கி எறிந்துகொண்டிருக்கும் இந்த எலக்ட்ரானிக் வேஸ்ட்டுகள் மண்ணில் மக்காமல் அடுத்த தலைமுறைகளுக்கு பேராபத்துக்களை விளைவிக்கப்போகின்றது என்பதை தயாரிப்பாளர்கள் முதல் நாம் அனைவரும் சேர்ந்து மிக எளிதாக மறந்துவிட்டோமே.

இந்த குப்பைகள் சேராமல் தடுத்து நிறுத்தவோ அல்லது அப்புறப்படுத்துவதற்கான திட்டங்களை யோ மத்திய மாநில அரசுகளும் எடுக்கவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குறிய விஷயம்.. என்னென்னவோ திட்டங்களை அறிவிக்கும் இந்த அரசு சுகாதாரத்தையும், சுற்றுப்புறத்தையும், பிளாஸ்டிக் பொருட்களாலும், இவேஸ்ட்டேஜ் ஆலும் ஏற்படப்போகும் பேராபத்தினை தடுக்கத் தவறிவிட்டது..

இப்படியே போகுமானால் வருங்கால சந்ததியினரின் நிலை மிக மோசமாக இருக்கும்..
- உதய குமார்
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.