ஆண்மகனின் பேறுகாலம் … அனைவரும் தவறாமல் தவிர்க்காமல் படிக்கவும்..

Loading...
ஆண்மகனின் பேறுகாலம்

காலை அலுவலகம் செல்கையில்:

எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க.

இரவு 2 மணி:


கணவன் : ஒரு வேலை உண்டாயிருந்தா என்ன பண்றது?

மனைவி : பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க.

விடியற்காலை 5 மணி:

கணவன் : போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு.

5:10 மணி:

மனைவி : இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.

கணவன் : (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்.

மனைவி : பாத்துக்காம இருந்து தான் பாரேன்.

2 ஆம் மாதம்:

மனைவி : Doctor checkup க்கு appointment போட்டியா?

எனக்கு பயங்கரமா தலை சுத்துது.

எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.

இடுப்பெல்லாம் வலிக்குது.

கணவன் : நீ rest எடு. நான் பாத்துக்கிறேன்.

3 ஆம் மாதம்:

மனைவி : மருத்துவமனைக்கு கூட வருவ தானே?

அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.

அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.

நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?

கணவன் : இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?

மனைவி : கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது.

கணவன் : சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம்.

மனைவி : அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ.

4 ஆம் மாதம்:

இரவு 3 மணி:

மனைவி : எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?

கணவன் : (தூக்க கலக்கத்தில்) போறேன்.

வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .

அவள்: :O

5 ஆம் மாதம்:

மனைவி : கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.

கணவன் : பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.

மனைவி : என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற?

6 ஆம் மாதம்:

மனைவி : முக்கி முனகி எந்திரிக்க முனைகையில்

கணவன் : என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.

மனைவி : யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில.

கணவன் : இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10

தடவை எந்திரிக்க வேண்டாம்.

மனைவி : (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன்.

7 ஆம் மாதம்:

கணவன் : பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.

மனைவி : எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க?

கணவன் : பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?

மனைவி : நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும்.

கணவன் : சரி. நான் போறேன். உன்ன பாக்கல.

மனைவி : ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத.

8 ஆம் மாதம்:

நடுஇரவில்:

மனைவி : ஏன் தூங்குற?

கணவன் : இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?

மனைவி : ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும்

தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான்.

கணவன் : சரி. நான் திரும்பியே படுத்துகிறேன்.

9 ஆம் மாதம்:

மனைவி : ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.

கணவன் : பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.



மனைவி : நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, “push, push” னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன்.

கணவன் : சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.

மனைவி : ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.

கணவன் : கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ.

10 ஆம் மாதம்:

மனைவி : என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடுங்க. இதுக்கு மேல முடியாது.

கணவன் : கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான்.
கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழு
Loading...
tamizilnews. Powered by Blogger.