திருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த சோகம்!

Loading...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும். கரூரை சேர்ந்தவர் வைஷ்ணவிக்கும் கடந்த  செப்டம்பர் 8–ந் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  திருமணம் நடந்தது. 


முதல் இரவு அடுத்த நாள் இரவு நடப்பதாக இருந்த நிலையில் அன்று காலை ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை அருகே வேதகிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றிருக்கிறார்கள்.  

அப்பொழுது புதுப்பெண் சிறுநீர் கழிப்பதற்காக மலையின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டு 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். 

அப்போது அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டுக்கொண்டே கீழ் நோக்கி உருண்டு கொண்டிருந்தார். தன் கண்முன்னே நடந்த இந்த காட்சியை கண்டதும், அதிர்ச்சியில் உறைந்து போன இளங்கோவன் சத்தம் போட்டுக்கொண்டே வைஷ்ணவியை காப்பாற்ற முடியவில்லை. 

இளங்கோவனின் சத்தம் கேட்டு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் சம்பவ இடம் நோக்கி ஓடோடி வந்தனர். அவர்களாலும் வைஷ்ணவியை காப்பாற்ற முடியவில்லை.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு மூலம் வைஷ்ணவியைமீட்டனர். 
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

திருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதிகளில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.