சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

Loading...
இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகின்றது.

ஏற்கனவே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளிலும் வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி 110 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 

ஒரு நாள் போட்டியில் 30 சதம் அடித்து அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். அதே போல இலங்கை அணிக்கு எதிராக அவர் நேற்று அடித்த சத்தத்தோடு 8 சதம் அடித்திருக்கிறார்.

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 8 சதம் அடித்திருந்தார். இந்த சாதனையை நேற்றைய ஆட்டத்தில் அடித்த சதத்தின் மூலம் விராட் கோலி சமன் செய்தார். 
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.