தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்த மகன்! தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்

Loading...
அடிமாலி இரும்புபாலம் அருகே சந்திரன் (வயது 69). இவருடைய மனைவி சரோஜினி (60). இவர்களுக்கு சஜி, சாபு ஆகிய மகன்கள் உள்ளனர். அவர்களுடைய மகன்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் சாபு வீட்டில் சந்திரனும், சரோஜினியும் வசித்து வந்தனர்.

சாபுவும் அவரது மனைவியும் ஆலோசனை செய்து புது வீடு கட்டி தனி குடித்தனம் செல்ல முடிவு செய்தனர். அவரது பெற்றோரை வாடகை வீட்டில் குடியமர்த்தவும் முடிவு செய்திருந்தனர். 

இதை அறிந்த பெற்றோர் வயதான காலத்தில் தங்களால் எப்படி தனியாக வாழ முடியும் என்று எண்ணி மிக வருத்தத்தில் இரவில் தற்கொலை செய்து கொண்டனர். இதில் சந்திரன் வீட்டின் பின்பக்கம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டும், சரோஜினி கை நரம்பை அறுத்துக்கொண்டும் தற்கொலை செய்து கொண்டனர். 
காலையில் எழுந்து பார்த்த சாபுவிற்கு இது மிக பெரும் அதிர்ச்சியளித்தது. அதன் பின் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல் துறை வந்து விசாரணை நடத்தினர், 

அதில், வயதான காலத்தில் எங்களை தனியாக தவிக்கவிட்டு சாபு தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எங்களை இனி கவனிக்க யாரும் இல்லை. அதனால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்த கடிதம் சிக்கியது. 

இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.