தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்... கஜினி படம் போல உடலில் எழுதி வைத்திருந்த ரகசியம்

Loading...
சென்னையை அடுத்த மணலியில் வரதட்சணை கொடுமையால், பட்டதாரிப் பெண் ஒருவர் தனது உடல் முழுவதும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தேவிக்கும், மணலி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த டார்வின் ராஜா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே டார்வின் ராஜாவின் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு, தேவியை கொடுமைப்படுத்த தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதை தனது வீட்டில் சொல்லாமல் தேவி மறைத்து வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் டார்வின் ராஜா, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும், இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே சம்பவத்தன்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த தேவி, தனது அறைக்குச் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பிரேத பரிசோதனை போது, தனது வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி இருந்தது தெரிய வந்தது. அதில் அவர், ‘‘எனது சாவுக்கு கணவர், மாமனார் பிச்சையன், மாமியார் வசந்தா ஆகியோர்தான் காரணம். எனக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதை 17 பக்க கடிதமாக எழுதி எனது அறையில் கட்டிலுக்கு அடியில் வைத்து உள்ளேன்’’ என எழுதி இருந்தார்.
அதில் கணவனை கைது செய்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்று நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தேவி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தேவியின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து மணலி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.