முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்தியா அபார வெற்றி

Loading...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆட்டம் துவக்கத்தில் அதிர்ச்சியாக இருந்தது. 6 ஓவருக்குள் 3 விக்கெட் பறிபோனது.

முதலில் களம் இறங்கிய ரகானே 5 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் விராட் கோஹ்லி, மணீஷ் பாண்டே டக் அவுட்டாயினர்.பின்னர் களமிறங்கிய ஜாதவ் 40 ரன், தோனி 79 , பாண்ட்யா 83 ரன்கள் எடுத்து அவுட்டாயினர்.
புவனேஸ்குமார் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸை தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இருமுறை பாதிக்கப்பட்டு இறுதியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக பெரிதும் போராடினாலும் ஒரு புறம் விக்கெட் சரிந்து கொண்டே வந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இதையடுத்து இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்றது.

Loading...
tamizilnews. Powered by Blogger.