வெறும் 195 ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த கோலி

Loading...
தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் வென்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றது. இந்நிலையில் நேற்று ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 110 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன் விராட் கோலி
இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இது 30-வது சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். பாண்டிங் 30 சதத்தை 375 போட்டிகளில் அடித்து இருந்தார். ஆனால் கோலி 195 போட்டிகளில் எட்டியுள்ளார்.

இந்திய வீரர் சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை. விரைவில் சச்சின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.