இதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.

Loading...
🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்....

🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல.....

🌼இரவு 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற பொண்ணுங்க தப்பான பொண்ணுங்கன்னு சில ஆண்களோட நினைப்பு.... இன்பாக்ஸ் ல போய் தப்பா மெசேஜ் பண்றது....

🌼எனக்கு எப்படி தெரியும்னா என்னோ ஒரு அக்கா மனமுடைஞ்சு என்கிட்ட அழுதிட்டே சொன்னது...

🌼எவ்ளோ பேர் பாதிக்க பட்டிருக்காங்கன்னு தெரியல...

🌼பேஸ் புக் அக்கா கிட்ட ஒருத்தன் 10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கான்....

🌼இவங்க ரிப்ளை பண்ணல....
தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்... அதுக்கு இவங்க தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லைன்னு....

🌼அதுக்கு அவன் 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற எவன் கூட கொஞ்சிட்டு இருக்கியோன்னு உனக்கென்னடி மரியாதைன்னு சொல்லி இருக்கான்....

🌼அவங்க அழுதிட்டே அவனை பிளாக் பண்ணிட்டு பேஸ்புக்க டி ஆக்டிவேட் பண்ணிட்டாங்க... போண்ல ஒரே அழுகை... நான் தான் சமாதான படுத்தி பேஸ்புக் வர வச்சேன்....

🌼டேய் எச்சை பசங்களா பொண்ணுங்க ஏன் 10 மணிக்கு மேல ஏன் பேஸ்புக் வறாங்கன்னு சொல்றேன்...

🌼அவங்க புருஷன் வெளி நாட்டுல இருக்கலாம்... அங்க 11 மணின்னா இங்க 8.30 மணி.... அவங்க புருஷன் கூட ஐ எம் ஓ ல பேசிட்டு இருக்கலாம்... அவங்க கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்....

🌼ஏதாவது பங்சன் வீட்ல இருக்கலாம்...

🌼டிராவல் பண்ணிட்டு இருக்கலாம்...

🌼ஆன்லைன் ல ஏதாவது ஸ்டோரி படிச்சிட்டு இருக்கலாம்....

🌼வீட்டு வேலை முடிச்சிட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நல்ல போஸ்ட் க்கு் லைக் பண்ணிட்டு இருக்கலாம்....

🌼வேலைக்கு போன புருஷன் வர லேட்டானா தூங்காம இருக்க பேஸ்புக் பார்த்திட்டு இருக்கலாம்.....

🌼சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கலாம்...

🌼நண்பர்களோடு அண்ணன் தம்பியோட பேசிட்டு இருக்கலாம்....

🌼தூக்கம் வராம மனசு கஷ்டத்துல பேஸ் புக் வரலாம்...

🌼படிக்குற பொண்ணுங்க தூக்கம் வராம இருக்க அப்பப்போ பேஸ் புக் வந்திட்டு போகலாம்...

🌼இப்படி எவ்ளோவோ இருக்கு....

🌼உங்க கிட்ட பேசணும்னு எந்த கட்டாயமும் இல்லை...

🌼பொண்ணுங்களுக்கு முதல்ல மரியாதை குடுக்க கத்துக்கோங்க....

🌼அவங்களுக்கு உடம்பு மட்டுமில்ல உணர்வுகளும் மனசும் இருக்கு புரிஞ்சுக்கோங்க....

🌼உங்களை மாதிரி ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே பொண்ணுங்க பய படுறாங்க....

🌼இப்படி பட்டவங்களை பிளாக் பண்ணிட்டு உங்க வேலையை பாருங்க நீங்க....

🌼100 நல்லவங்க இருந்தா 10 கெட்டவங்க இருக்க தான் செய்வாங்க....

🌼பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....!!

🌼பிரியமானவன் மணி🌼
Loading...
tamizilnews. Powered by Blogger.